35 நடிகைகள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிரபல நடிகை

நடிகை ரெஜினா கசான்ட்ரா பாலிவுட் படம் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்திருந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக் லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தில் சோனம் கபூர் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார். கதைப்படி அவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்கின்றனர். திருமணம் நடந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிகை சோனம் கபூரின் பெண் காதலியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 35 நடிகைகளிடம் ஓரினச் சேர்கையாளராக நடிக்குமாறு கேட்டும் அவர்கள் மறுத்துவிட்ட நிலையில் இறுதியாக நடிகை ரெஜினா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.