தமிழ் சினிமா ஹீரோக்களின் காதல் கதைகள்..!! அதன் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?


திரை உலகம் என்றாலே கிசுகிசுக்கள் என்பது சர்வ சதாரணம். அந்த நடிகைக்கும், இந்த நடிகருக்கும் காதல்..? விரைவில் திருமணம் என்று, செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்று கூறலாம்.

ஆனால், இதுப்போன்று வெளிவந்த சில செய்திகள் ஆரம்பத்தில் உண்மை என்று நம்பப்பட்டாலும்.., பிறகு அது வெறும் புரளி என்று தெரிய வரும்.

ஆனால், அது போன்ற புரளிகள் கூட காலங்கள் அழிந்தாலும் அழியாது என்பது போல நிலைத்து நிற்கும்…

அது போன்று பரபரப்பாக பேசப்பட்ட சில புரளிகளை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க….

கமல் – ஸ்ரீதேவி

1980-ஆம் ஆண்டுகளில் கமல் ஸ்ரீதேவியை காதலிக்கிறார் என்று அன்றைய செய்தித்தாள்களில் பல கிசு கிசுக்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.


ஸ்ரீதேவி – ரஜினிகாந்த்

1980-களில் இருந்தே தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார்.

ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

கமல் – சிம்ரன்

“பம்மல் கே சம்மந்தம்”, “பஞ்ச தந்திரம்” போன்ற திரைப்படங்களின் போது கமலும், சிம்ரனும் காதலிப்பதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்றும் கிசுகிசுக்கள் பரவின.


பிரபு – குஷ்பு

திருணமான பிரபுவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நாயகி குஷ்பு தான். இவர்களது ஜோடி பொருத்தமும் அட்டகாசமாக இருந்தது.


ஒரு சமயத்தில் இவர்கள் நிஜமாகவே திருமணம் செய்துக் கொண்டால் கூட நன்றாக தான் இருக்கும் என்று ரசிகர்களே விரும்பினார்கள்.

விஜய் – சங்கவி

நடிகர் விஜயின் ஆரம்ப காலக்கட்ட திரைப்பட பயணத்தின் போது, நடிகை சங்கவியுடன் ரசிகன், விஷ்ணு போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தார்.

அந்த சமயத்தில், இருவருக்கும் இடையே காதல் உள்ளது. விரைவில் திருமணம் செய்து கொள்ளவர்கள் என்று கூறப்பட்டது.


குறிப்பாக, இந்த இரண்டு படங்களும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

அஜித் – ஹீரா

பெரும்பாலும் பலரும் அறியாத கிசுகிசுக்கப்பட்ட ஜோடி இவர்கள்.

தற்போதைய தல ரசிகர்கள் பலருக்கு கூட இது தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.


விஷால் – வரலட்சுமி

இன்று வரையிலும் உண்மையா, இரகசியமா, புரளியா என்பது போல உலாவி வருவது விஷால் – வரலட்சுமி காதல் கதை.


இடையில்.., விஷால் – லட்சுமிமேனன் என புது ரூட்டு வேறு ஓடிக் கொண்டிருந்தது.

சித்தார்த் – சமந்தா

சித்தார்த் சமந்தா இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்று கூறப்பட்டது.


கடைசியில் எப்போதும் போல இதுவும் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து போனது.

இந்த ஜோடிகளை போல…, இன்னும் பல ஜோடிகள் புரளியாக பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#