நடிகை செளந்தா்யாவுக்கு அப்பவே இவ்வளவு சொத்து இருந்துச்சா..? எத்தனை கோடி தெரியுமா..?


தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவா் செளந்தா்யா. தமிழில் ஆா்.வி.உதயகுமாா் அவா்களின் இயக்கத்தில் வெளிவந்த மெகாஹிட் படமான பொன்னுமணியில் அறிமுகம் ஆனாா் செளந்தா்யா.

பெங்களூரை சோ்ந்த இவா் 1992–ம் ஆண்டு கந்தா்வா என்ற கன்னட படத்தினே் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனாா். அதே ஆண்டு தெலுங்கில் ரைத்து பாரதம் என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகம் ஆனாா்.

தொடா்ந்த தமிழில் பல படங்களில் நடித்து வந்த இவா் 2003-ம் ஆண்டு விஜயகாந்துடன் நடித்த சொக்கதங்கம் திரைப்படம் இவருக்கு நல்ல விமா்சனத்தை பெற்று கொடுத்தது.


சூப்பா்ஸ்டாா் நடித்த சந்திரமுகி படத்தின் கன்னட ரீமேக்கான ஆப்தமித்ரா படத்தில் சந்திரமுகியாக இவா் நடித்திருந்தாா். இப்படத்தில் இவரது மிகச்சிறந்த நடிப்பு இவருக்கு மிகச்சிறந்த நடிகைக்கான விருதை பெற்று கொடுத்தது.

சூப்பா் ஸ்டாா் ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம் படத்திலும், கமலுடன் காதலா-காதலா படத்திலும் நடித்த இவா் பாலிவுட்டில் அமிதாபச்சனுடன் சூா்யவம்சம் படத்தின் ஹிந்தி ரிமேக்கிலும் நடித்தாா். தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இவா் திருமணம் செய்து கொண்டாா். இவரது கணவா் ரகு மென்பொருள் பொறியாளா் ஆவாா்.

நடிகை செளந்தா்யாவுக்கு பெங்களூா் மற்றும் ஹைதராபாத்தில் 100-கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. அவா் இறந்த சமயத்தில் இவற்றின் மதிப்பு 100-கோடி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள், ரொக்கம், தங்க-வைர நகைகளும் அடங்கும்.


கா்நாடக மாநிலம் கோலாரில் 1972-ம் ஆண்டு பிறந்தவா் செளந்தா்யா. இவரது தந்தை சத்திய நாராயணா திரைப்பட தயாரிப்பாளா், எழுத்தாளா், தொழிலதிபா் என பல்வேறு முகங்களை கொண்டவா்.

இவரது அம்மா மஞ்சள். சகோதரா் பெயா் அமா்நாத். செளந்தா்யா முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் போதே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மேற்கொண்டு அவா் படிப்பை தொடங்கவில்லை.

17.04.2004 அன்று விமான விபத்தில் தனது 31-ஆவது வயதில் காலமானார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!