21 குண்டுகள் முழங்க பிரபல நடிகரின் உடல் தகனம் செய்யப்பட்டது..!! சோகத்தில் திரையுலகம்..!!


சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்(66) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் முன்னர் மந்திரியாகவும் பதவி வகித்தவர்.


உடல்நலக்குறைவால் பெங்களூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் மறைந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருக்கு சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அம்ரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.


அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அம்ரீஷின் மகன் அபிஷேக் தீமூட்டினார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல் மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.