பிக்பாஸ் பிரபலங்கள் இங்க என்ன பண்றாங்கனு தெரியுமா..?


பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் பங்கேற்ற அனைவரையுமே ஏதோ ஒரு வகையில் பிஸியாக்கிவிட்டுவிட்டது, நிகழ்ச்சியை தொகுத்துத் தந்த கமல் ஹாஸன் உள்பட.

நடிப்பு, விளம்பரங்கள், கல்லூரி நிகழ்ச்சிகள் கடைத் திறப்புகள் என படு சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமுக்கு அடுத்தடுத்த தமிழ், மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்துள்ளன.ஜூலி கூட டிவி, சினிமா என புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஓவியாதான் ஏகப்பட்ட பார்ட்டிகளில் பிஸியாகிவிட்டார்.

அண்மையில் நடந்த ஒரு தனியார் நிறுவன உணவக அறிமுக விழாவில் சுஜா, காயத்ரி ரகுராம், கணேஷ் வெங்கட்ராம், சக்தி மற்றும் ஹரீஷ் ஆகிய 5 பேரும் மொத்தமாகக் கலந்து கொண்டார்கள். இவர்களே சமைத்ததுபோல, சமையல் கலைஞர்கள் வேடம் போட்டு கொஞ்ச நேரம் போஸ் கொடுத்தனர்.ஜூலி, ஓவியாவை ஏன் விட்டுட்டீங்க? என்று கணேஷிடம் கேட்டபோது, “இது எங்க ஏற்பாடு இல்லை. நிகழ்ச்சி நடத்தினவங்க கூப்பிட்டாங்க. வந்தோம்..” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#