வாவ்.. நம்ம அஜித் மகளா இது..? தற்போதைய நிலையை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்..!!


நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டனர். இப்போது விஸ்வாசம் திரைப்படத்தின் டப்பிங்கை அஜித் முடித்துள்ளார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் டப்பிங்கில் என்னென்னெ வெரைட்டி காண்பித்திருக்கிறார் என்பதை படத்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக அஜித் குரலில் மதுரை பாஷையைக் கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளது. மும்பையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன், விவேக், தம்பிராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, யோகிபாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

இன்னிலையில் நடிகர் அஜித் அவருடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.


அதில் ஒரு புகைப்படத்தில் அஜித் மிகவும் எளிமையாக, வெள்ளை தாடி மற்றும் வெள்ளை முடிகளுடன் உள்ளார்.

இதேவேளை, அவருடைய குழந்தை வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். இதை தொடர்ந்து அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி மூவரும் தனியான புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர். மேலும், தற்போது சிவா இயக்கத்தில் தல நடித்த விசுவாசம் படம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!