உனக்கு இப்போ எதற்கு திருமணம்..? நடிகையிடம் பேசுவதை நிறுத்திய தந்தை..!!


பாலிவுட் நடிகை கஜோல் கெரியரின் உச்சத்தில் இருந்தபோது 1999ம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நியாசா(15) என்ற மகளும், யுக்(8) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தனது திருமணம் பற்றி பேசியுள்ளார் கஜோல். அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நானும், அஜய் தேவ்கனும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றதும் பலரும் வேண்டாம் என்றார்கள். நான் திருமண பேச்சை துவங்கியதும் என் தந்தை என்னுடன் ஒரு வார காலமாக பேசவே இல்லை.


நான் திருமணம் செய்வது பிடிக்காததால் என் தந்தை பேசவில்லை. உனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது, கெரியர் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்திலா திருமணம் செய்யப் போகிறாய் என்று என் தந்தை கேட்டார். ஆம் எனக்கு உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று பதில் அளித்தேன்.

அஜய்யும், நானும் வித்தியாசமானவர்கள். அதனால் நாங்கள் திருமணம் செய்தால் ஒத்து வராது என்றே பலர் நினைத்தனர். நாங்கள் ஒன்றாக இருப்பதை பலரும் பார்த்தது கிடையாது. அதனால் எங்களுக்கு இடையே செட் ஆகாது என்றே முடிவு செய்துவிட்டனர். எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி தான் திருமணம் செய்து கொண்டோம்.


எங்களுக்கு இடையே வித்தியாசங்கள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒரே ஆளாக ஆகிவிட்டோம். எங்களின் குழந்தைகள் தான் எங்களின் கைகள் என்கிறார் கஜோல்.

அஜய் தேவ்கன் கஜோலை காதலிப்பதற்கு முன்பு தனது சகோதரியின் திருமணத்திற்கு அழைக்க அவருக்கு போன் செய்து கஜோலா என்று கேட்டுள்ளார். அதற்கு கஜோலோ இல்லை இது ஸ்ரீதேவி, ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!