ஆத்தாடி.. நம்ம இலியானாவா இப்படியொரு காரியத்தை செய்தாங்க..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட இவர் தற்போது படங்களில் நடிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

கோவாவில் இப்போது தங்கியிருக்கும் இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதை மறந்தே விட்டார். பாலிவுட் படங்களில் நடிக்க வரும் வாய்ப்பை அல்வா சாப்பிடுவது போல ஏற்றுக்கொள்கிறார். ஹிந்தியில் பிரபல நடிகையாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என அடிக்கடி பேட்டிகளில் கூறிவருகிறார்.


இந்நிலையில், தெலுங்கில் ரீமேக் ஆகும் “AAA” படத்தில் நடிக்க இலியானாவை அழைத்துள்ளார்கள். நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு பதிலாக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கூறி தயாரிப்பாளரை கதற விட்டுள்ளார் அம்மணி.

படத்தில் லிப்-லாக் காட்சிகள், நீச்சல் குள காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என ஏகத்துக்கும் எழுதி வைத்துள்ளார்கள். அனைத்தையும் ஏற்றுகொண்டு நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டிருக்கிறார் இலியானா. இதனால் தான் இரண்டு கோடி சம்பளம் கேட்கிறார் இலியானா என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!