நடிகையை முத்தமிட மறுத்த ஸ்டார் ஹீரோ..!!


இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் சல்மான் கான், கத்ரீனாவுடனான முத்தக்காட்சியில் நடிக்க மறுத்து விட்டார்.

‘ஏக்தா டைகர்’ என்ற இந்தி படத்தின் 2-வது பாகமாக ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தில் சல்மான்கான் நாயகனாக நடித்து வருகிறார். அலி அப்பாஸ் ஜாபர்கான் இயக்கும் இந்த படத்தில் சல்மான்கான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார்.

இது அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. நாயகன்-நாயகிக்கு நெருக்கமான காதல் காட்சிகளும் இருக்கின்றன. இதில் சல்மான்கான், கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குனர் வைத்து இருந்தார். படத்துக்கு அந்த காட்சியால் கூடுதல் விளம்பரம் கிடைக்கும். படம் பிரபலமாகும் என்று இயக்குனர் திட்டமிட்டு இருந்தார்.


இது பற்றி சல்மான்கானிடம் இயக்குனர் கூறினார். ஆனால், சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். பலமுறை இயக்குனர் வற்புறுத்தி கூறியும், முத்தக்காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. டிசம்பர் 22-ந் தேதி ‘டைகர் ஜிந்தா ஹே’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!