முன்னணி நடிகைகள் மறுத்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்..!!


இயக்குனர் கிருஷ்ணவம்சி. இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. காட்கம், முராரி, ராக்கி போன்ற படங்கள் அவற்றில் சில.

ஆனால், சமீப காலமாக பெரிய நடிகர்களுடன் கூட்டணி அமைத்து இவர் இயக்கிய எல்லா படங்களும் படுதோல்வியை சந்தித்தன. நாணி நடிப்பில் வெளியான பைசா, கோபிசந்த் அண்டித மோகுடு, ராம்சரண் நடித்த கோவிந்துடு அண்டரிவாடேலே, சுந்திப் கிருஷ்ணா நடித்த நக்ஷத்திரம் என இவர் இயக்கிய அனைத்து படங்களும் வந்த இடமும், போன தடமும் தெரியாமல் மறைந்தன.

இந்நிலையில், முற்றிலும் புது முகங்களை மட்டுமே வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் கிருஷ்ணவம்சி. ஒரே ஒரு பிரபல நடிகை மட்டும் நடிக்க வேண்டும் என்பது போன்ற கதை என்பதால் பல முன்னணி நடிகைகளிடம் கதை சொல்லி நடிக்க அழைத்துள்ளார். ஆனால், இவரின் சமீபத்திய படங்களின் தோல்வியால் கதையையே கேட்காமல் எஸ்கேப் ஆகி விட்டார்கள் நடிகைகள்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தில் நடிக்க முன்வந்துள்ளார். இப்படி, பல முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் காஜல் நடிக்க ஒப்புக்கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் கிருஷ்ணவம்சி நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!