காலா கெட்டப்பில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ் நடிகை..!! எப்படி தெரியுமா..?


ரஜினியின் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின் வெளியாகி இருக்கும் திரைப்படம் காலா. ரஜினி, ரஞ்சித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இந்த திரைப்படமானது பல்வேறு எதிர்ப்புகளுக்குமிடையே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கின்றது.

சூப்பர் ஸ்டார் படம் என்பதனால் சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சியிலேயே காலா திரைப்படத்தை கண்டுகளித்தனர். அப்படி காலா படத்தை ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன், காமெடி நடிகை ஆர்த்தியும் கண்டு ரசித்தார்.


மேலும் ரசிகர்களைப் போலவே அவரும் கருப்பு வேஷ்டி, சட்டை அணிந்து தியேட்டருக்கு வந்திருந்தார். இப்படி காலாவின் கெட்டப்பிலேயே காலா படம் பார்த்த புகைப்படங்களை,இவர் அண்மையில் தன் சமூக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

இவரின் இந்த புகைப்படங்களை பார்த்து, ஒரு சில ரஜினி ரசிகர்கள் பாராட்டினாலும், ‘அரசியலில் நடிகர் கமல் ஹாசனின் ஆதரவாளரான நீங்களா, ரஜினியின் படத்தை புகழ்கின்றீர்கள்’ என சர்ச்சையான கருத்துக்களும் அந்த பதிவில் இடம் பெற்றிருந்தன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!