வேளாண்துறை, தொழில்துறையாக மாறினால் மட்டுமே அனைவரும் வாழ முடியும்: கமல்ஹாசன் அதிரடி


தமிழக அனைத்து ஒருங்கிணைப்புக் குழு விவசாயிகள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் விவசாயிகளிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் முன்பு கமல்ஹாசன் பேசிய போது,


விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நிபந்தணையின்றி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாதரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியதாக கமல் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லால், ஏரி, குளங்களை செப்பனிட ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், ரசிகர்கள் குழு குழுவாக பிரிந்து விரைவில் விவசாயிகளை சந்திக்க இருப்பதாகவும், ரசிகர்களுடன் சேர்ந்து பணியாற்ற வாருங்கள் என்று விவசாயிகளுக்கு கமல் அழைப்பு விடுத்தார்.


மேலும் பேசிய அவர், வேளாண்துறையை தொழில்துறையா மாற்றினால் தான் அனைவரும் வாழ முடியும். பல ஆண்டுகளாக விவசாயிகளின் பெருமைகளையும், அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் கேட்டு வளர்ந்தவன் நான். விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக தான் இங்கு வரவில்லை, உங்களை கோபப்படுத்தி களத்தில் இறங்க வைக்கவே வந்துள்ளேன் என்றும் கூறினார்.


முன்னேற்றம் என்ற பெரில் இயற்கையை சூறையாடுவது நாட்டையே பாதிக்கும். அதனை நாம் அனுமதிக்க கூடாது. டெல்லியில் இருந்து ஒருவர் என்னை பொறுக்கி என்கிறார். நான் பொறுக்கி தான். அறிவு, சிந்தனை வரும் போது தான், நான் ஒரு பொறுக்கி என்பதை உணருகிறேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!