பிரபல நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் கதறி அழுத அபர்ணதியின் அம்மா..!! எதற்காக தெரியுமா..?


பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார்.

தற்போது அகாதா, அபர்ணதி, சுசானா, சீதாலட்சுமி, நவீனா, சுவேதா என 6 மட்டும் தான் இருக்கிறார்கள். இந்த 6 பெண்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணாக இருப்பது அபர்ணதி தான். நேற்று முன்தினம் நிகழ்ச்சியில் அபர்ணதி மற்றும் நவீனா தான் எலிமினேஷனில் நின்றார்கள். அதில் ஆர்யா அபர்ணதியிடம் என்று அவருக்கு நிகழ்ச்சியில் தொடர ஆசையா என்று கேட்டார். நவீனா தான் எலிமினேட் செய்யப்பட்டார்.


எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தற்போது 5 பெண்கள் அவரை இம்ப்ரெஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். நேற்றைய தின நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா அபர்ணதியின் வீட்டுக்கு சென்றிருந்தார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் குடும்ப உறுப்பினர்களுடன் கொஞ்ச நேரம் தனியாக உரையாடினார். அபர்ணதியின் அம்மா ஆர்யாவிடம் மிகவும் எமோஷனலாக பேசினார். “எனக்கு ஆண் குழந்தை இல்லை. பெண் குழந்தைகள் தான் என்பதால் மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வந்தோம்.

வீட்டை விட்டு வெளியில் தனியாக விடமாட்டோம். என் கணவர் எப்போதும் வேலைக்காக வெளியில் தான் தங்கியிருப்பார்.

அதனால் எங்களுக்கு வரும் மருமகன் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து எங்களை பார்த்துக்கொள்ள வேண்டும் ‘ என அபர்ணதியின் அம்மா அழுதார். ஆர்யாவும் ‘நான் நிச்சயம் இருப்பேன்’ என பதில் கூறி சமாதானப் படுத்தினார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி