விஜய் பட நடிகையின் தற்போதைய பரிதாப நிலைமை..!! என்ன செய்கின்றார் தெரியுமா..?


தளபதி விஜய்க்கு கடந்த காலங்களில் வந்த அரசியல் நெருக்கடிக்குள் இருந்து மீண்டு வர உதவிய படம் காவலன். இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். ஆனால், அசினின் தோழியாக வரும் மித்ரா தான் விஜய்யை இறுதியில் திருமணம் செய்துக்கொள்வது போல் கதை இருக்கும்.

இந்நிலையில் இவர் மார்க்கெட் இழந்து சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கி இருந்த நிலையில், தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.


சினிமா போனால் என்ன? சின்னத்திரை இருக்கின்றதே என தமிழ் நாடகத் தொடரில் நடிக்க தொடங்கிவிட்டார், சன் டிவியில் வரும் அழகு என்ற சின்னத்திரைத் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மித்ரா நடித்து வருகின்றார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், இப்படி நாடகத்துக்கு வந்துவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி